Header Logo
SLIC
மலையகம்
கொத்மலையில் கூடாரங்களில் வாழ்ந்துவரும் மக்கள்!

Mar 1, 2026 - 11:52 AM

கொத்மலையில் கூடாரங்களில் வாழ்ந்துவரும் மக்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

'டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை - ரம்பொடை, வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். 

மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். 

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், 

'டித்வா' புயல் தாக்கி தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிறகு, சுமார் ஒரு மாதமாக பொது இடங்களிலும், தோட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வசித்து வந்தோம். பின்னர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 25 குடும்பங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தற்காலிக கூடாரங்களைத் தயாரித்து தங்க வைத்துள்ளனர். 

எனினும் தற்போது இடைக்கிடையே மழை பெய்து வருகிறது அத்துடன், அதிக காற்று வீசும் போதும் கூடாரங்களில் தொடர்ந்து தங்குவது சாத்தியமற்றது என்றும், தற்போதைய அரசாங்கம் புதிய வீடுகளை கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர். 

அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

வரும் நாட்களில் கொத்மலை பகுதியில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதால். மீண்டும் ஒரு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தமக்கான நிரந்தர வீடுகளும் இல்லாமல், தற்காலிக வசிப்பிடத்தில் அடிப்படை வசதிகளும் இல்லாமலும் பெரும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் எமக்கு விடிவையும், உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278