Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
உலகம்
வரலாற்றுச் சாதனை படைத்த 𝕏 தளம்!

Mar 1, 2026 - 02:42 PM

வரலாற்றுச் சாதனை படைத்த 𝕏 தளம்!
Mobitel Inner 1278

மத்திய கிழக்கில் திடீரென வெடித்துள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள மக்கள் உடனுக்குடனான தகவல்களைப் பெறுவதற்காக 𝕏 தளத்தை நாடியதால், இன்று அத்தளம் அதன் வரலாற்றிலேயே அதிகப்படியான பயன்பாட்டைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. 

குறிப்பாக, மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள கள நிலவரங்கள், நேரடி காணொளிகள் மற்றும் முக்கிய செய்தி அறிவிப்புகளை உடனுக்குடன் எவ்வித தடையுமின்றி அறிந்துகொள்வதற்காகவே சர்வதேச பயனர்கள் பெருமளவில் 𝕏 தளத்திற்குப் படையெடுத்துள்ளனர். பாரம்பரிய ஊடகங்களை விட, நேரடித் தகவல்களைப் பரிமாறும் முக்கிய ஊடகமாக 𝕏 தளம் தற்போது மாறியுள்ளது இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. 

இந்த வரலாற்றுச் சாதனையை 𝕏 தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இன்று தனது உத்தியோகபூர்வ 𝕏 கணக்கில் வெளியிட்ட பதிவொன்றில், "Highest usage of 𝕏 ever" (எக்ஸ் தளத்தின் வரலாற்றில் மிக அதிக பயன்பாடு) எனக் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய நெருக்கடி நிலைகளின் போது தகவல் பரிமாற்றத்தில் 𝕏 தளத்தின் முக்கியத்துவத்தை இந்தச் சாதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


MOST READ

காணொளி
பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

Mobitel 1278