Header Logo

செய்திகள்
கமேனியின் மறைவு: அனுதாபப் புத்தகத்தில் அமைச்சர் விஜித கையொப்பம்

Mar 4, 2026 - 07:53 PM -

0

கமேனியின் மறைவு: அனுதாபப் புத்தகத்தில் அமைச்சர் விஜித கையொப்பம்

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, கொழும்பில் உள்ள ஈரானிய இஸ்லாமிய குடியரசுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கையொப்பமிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும், இலங்கை தொடர்ந்தும் ஈரானின் நட்பை மதிப்பதுடன், ஈரான் மக்களுடன் நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கு இன்று நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தேன். அவரது பதவிக்காலத்தில் எமது இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்தன. இலங்கை தொடர்ந்தும் ஈரானின் நட்பை மதிக்கிறது. எங்கள் எண்ணங்கள் ஈரான் மக்களுடன் உள்ளன."

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title