Mar 4, 2026 - 08:05 PM -
0
ஈரானுடனான போர் நிலைமை காரணமாக இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, போரினால் நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியமை, அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டே இந்தப் பாரிய நிதி இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் நீண்ட காலம் தொடருமானால், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளும் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.