Header Logo

சினிமா
ஒரே காரில் சென்று திருமணத்தில் பங்கேற்ற விஜய், திரிஷா

Mar 5, 2026 - 09:05 PM -

0

ஒரே காரில் சென்று திருமணத்தில் பங்கேற்ற விஜய், திரிஷா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்ததாக கூறி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார். 

கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. 

இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில்தான் விவாகரத்து வழக்கு தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளன. திருமணத்தை மீறிய உறவில் இருப்பதால் நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்த நிலையில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண விழா சென்னையில் திருவான்மியூரில் இன்று நடந்தது. 

இந்த திருமணம் நிகழ்வில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடிகை திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றார். 

இருவரும் ஒரே காரில் சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். 

இருவரும் ஒரே நிற பட்டு உடைகள் அணிந்து விழாவில் பங்கேற்றனர். இதற்கு முன்பாக இருவரும் ஒன்றாக திருமண விழாவில் பங்கேற்றது கிடையாது. விஜய் - சங்கீதா விவாகரத்து பிரச்சினைக்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் முதல் திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title