Header Logo

இந்தியா
பதவியேற்ற கையோடு ராஜினாமா செய்தார் விஜய்!

May 10, 2026 - 04:54 PM -

0

 பதவியேற்ற கையோடு ராஜினாமா செய்தார் விஜய்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று (10) ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு மற்றொன்றை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், இன்று காலை தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். இதன்படி, அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்படும். இதனையடுத்து, அடுத்த ஆறு மாத காலத்திற்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title