Header Logo

செய்திகள்
வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்

May 4, 2026 - 12:42 PM -

0

வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்

UPDATE

 

03:40 அதிமுக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

 

அதேநேரம் திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் 4718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

 

அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பாபு வெற்றிபெற்றுள்ளார்.

 

03:15 - ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரும் சபாநாயகருமான அப்பாவு தோல்வியடைந்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றுள்ளார்.

 

02:40 - தற்போது வரை எண்ணப்பட்டுள்ள 2.88 கோடி வாக்குகளில் தமிழக வெற்றிக் கழகம் மாத்திரம் ஒரு கோடி வாக்குகளை பெற்றுள்ளது.
 

01:15 - தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை பின் தள்ளி ஸ்ரீநாத் வெற்றி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. 

தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் மதியம் 12 மணிவரையான நிலவரப்படி அதிக தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலைப் பெற்றுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட்ட விஜய், செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரபு உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளனர். 

அதேநேரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 31 அமைச்சர்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்துள்ளனர். 

இந்த எதிர்பாராத திருப்பம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 110 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 67 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

அதேநேரம் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 57 இடங்களில் பெற்றுள்ளது. 

இந்நிலையில் மேலூர் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். 

இது முதல் வெற்றி அறிவிப்பாக வௌியிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம்!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

title