Header Logo

இந்தியா
வேட்பாளர்களுக்கு விஜய் பிறப்பித்த அதிரடி கட்டளை

Apr 30, 2026 - 05:48 PM -

0

வேட்பாளர்களுக்கு விஜய் பிறப்பித்த அதிரடி கட்டளை

தமிழகத்தில் கடந்த 23-ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. 

தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியை தவிர ஏனைய 233 தொகுதிகளிலும் களம் கண்டது. 

இந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை இன்று (30) சென்னை வருமாறு, அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். 

வரும்போது, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர் வழங்கிய 17 சி படிவத்தையும் எடுத்து வருமாறு கூறியிருந்தார். 

இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று மதியம் த.வெ.க. வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். 

அப்போது, "தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். 

இதுவரை நன்றாக பணிபுரிந்துள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார். 

அதாவது, ஆளுங்கட்சியும் (தி.மு.க.), ஆண்ட கட்சியும் (அ.தி.மு.க.) பணம் கொடுத்து அழைத்தால், கட்சி தாவிவிடாதீர்கள் என்பதைத்தான் விஜய் அவ்வாறு கூறியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title