Mar 5, 2026 - 10:42 PM -
0
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
மும்பையில் இன்று (5) இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், சிவம் டூபே 49 ஓட்டங்களையும், இஷன் கிசன் 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் மற்றும் ஆதில் ராசிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் 254 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கட்டுக்களை 7 இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேக்கப் பெத்தல் சதம் கடந்ததுடன் 105 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இதன்படி உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இந்திய அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.