Header Logo

செய்திகள்
காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும்

Mar 6, 2026 - 10:16 PM -

0

காங்கேசன்துறை -நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும்

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது இன்று மீண்டும் ஆரம்பமானது. 

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. 

பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது. 

கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் இச்சேவை இடம்பெறும். இருவழிப் பயணக் கட்டணமாக 28,500 இலங்கை ரூபா அறவிடப்படுகின்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title