Header Logo

செய்திகள்
இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்! அவுஸ்திரேலியா விளக்கம்

Mar 6, 2026 - 11:34 PM -

0

இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்! அவுஸ்திரேலியா விளக்கம்

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. 

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ சுற்றுலா அறிவுறுத்தல் மட்டத்தில் (Travel Advisory Level) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. 

துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனைகளுக்கு உத்தியோகபூர்வ 'ஸ்மார்ட்ராவலர்' (Smartraveller) இணையதளத்தை மாத்திரம் நம்பியிருக்குமாறு அவுஸ்திரேலியப் பிரஜைகளிடம் அந்த அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சமூக ஊடகங்களில் பரவி வரும் சில செய்திகள், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் சுற்றுலா அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தவறான தகவல்களைப் பரப்புவதாக உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. 

புதிய சுற்றுலா வழிகாட்டுதல்களுக்குப் பயணிகள் எப்போதும் 'ஸ்மார்ட்ராவலர்' இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகராலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title