Mar 7, 2026 - 12:50 AM -
0
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓமானுக்கு வடக்கே ஆறு கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக 'மூன்றாம் தரப்பு' தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.