Header Logo

இந்தியா
இந்தியாவில் சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிப்பு

Mar 7, 2026 - 08:11 AM -

0

இந்தியாவில் சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிப்பு

இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென உயர்ந்துள்ளது. 

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் தொடுத்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளது. 

எனவே இந்தியா குறுகிய காலத்துக்கு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. 

இதனிடையே இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. கையிருப்பு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் இந்தியா முழுவதும் நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.60-ம் உயர்ந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.114.50 உயர்ந்து ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. 

ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title