Header Logo

செய்திகள்
"மத்திய கிழக்கின் தோல்வியாளர் ஈரான்" - டொனால்ட் ட்ரம்ப் கடும் சாடல்

Mar 7, 2026 - 05:10 PM -

0

 "மத்திய கிழக்கின் தோல்வியாளர் ஈரான்" -  டொனால்ட் ட்ரம்ப் கடும் சாடல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான் நிலைதடுமாறிப் போயுள்ளதாகவும், தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரான், தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளது. அத்துடன், இனி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாகவே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதையும் கைப்பற்றி ஆள வேண்டும் என்பதே ஈரானின் நோக்கமாக இருந்தது."

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக ஈரான் தனது அண்டை நாடுகளிடம் தோற்றுப் போயுள்ளது. இதற்காக அந்த நாடுகள் எனக்கு நன்றி தெரிவித்துள்ளன. அதற்கு 'உங்களை வரவேற்கிறேன்' என நான் பதிலளித்துள்ளேன். ஈரான் இனி மத்திய கிழக்கின் 'ரௌடி'  அல்ல; மாறாக அவர்கள் 'மத்திய கிழக்கின் தோல்வியாளர்' . அவர்கள் முழுமையாகச் சரணடையும் வரை அல்லது வீழ்ச்சியடையும் வரை பல தசாப்தங்களுக்கு இதே நிலையே நீடிக்கும்."

"இன்று ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும். ஈரானின் மோசமான நடத்தை காரணமாக, இதுவரை இலக்கு வைக்கப்படாத பகுதிகள் மற்றும் குழுக்கள் மீது முழுமையான அழிவை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title