Mar 7, 2026 - 10:09 PM -
0
அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டைப் பகுதியில், அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதி இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை, நவகம்புர - உதயபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் அறுவடை இயந்திரத்தை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் முகப்பகுதி சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவருக்கு நீண்டகாலமாக வலிப்பு நோய் இருந்ததாகத் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்து காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.