Header Logo

சினிமா
என்னை காலி செய்ய வேலை நடக்குது!

Mar 9, 2026 - 04:16 PM -

0

என்னை காலி செய்ய வேலை நடக்குது!

சினிமாவில் தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்ததாக நடிகை பிரியங்கா மோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

டான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். 

தற்போது, தனது திரையுலக வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்ததாக பிரியங்கா மோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்த கடந்த காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், அது ஒரு வகையில் தன்னை ஒரு நல்ல மனிதராக மாற்ற உதவியது என்றும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா மோகன் கூறியதாவது, 

"எனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்துள்ளது. இன்று எல்லோரும் எல்லோரையும் ட்ரோல் செய்கிறார்கள். பழம்பெரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட இன்று ட்ரோல் செய்யப்படுகிறார்கள். என் விஷயத்திலும் அப்படி பல விஷயங்கள் நடந்தன. ஆனால் அந்த கடந்த காலத்திற்கு நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை," என கூறி உள்ளார் பிரியங்கா மோகன். 

தொடர்ந்து பேசிய அவர், 

"ஏனென்றால் அது ஒரு வகையில் என்னை ஒரு நல்ல மனிதராக மாற்ற உதவியது, அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். சினிமா துறை நிறைய நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு தளம். இங்கே யாருக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒரு கடினமான கட்டம் வரும்போது, அது நம்மை மேலும் உயர உதவும்," என்று பிரியங்கா மோகன் மேலும் கூறினார். சுதீர் சீனிவாசனுடனான ஒரு நேர்காணலின் போது பிரியங்கா இவ்வாறு பதிலளித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title