Header Logo

சினிமா
காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்!

Mar 9, 2026 - 04:44 PM -

0

காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்!

இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கல்கி 2 திரைப்படமும் ஒன்று. பிரபாஸ் நாயகனாக நடித்த கல்கியின் இரண்டாம் பாகம் தான் இது. நாக் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அவரின் கேரக்டர் முதல் பாகத்தில் ஒரு கேமியோ போல் அமைந்திருந்தாலும், இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய அளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கல்கி 2 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் கமல்ஹாசன். இந்தப் படத்திற்காக கமல் பெறும் சம்பளம் குறித்து நடிகர் யூகி சேது பேசி இருக்கிறார். 

கல்கி 2 படத்திற்காக 20 நாட்கள் நடிக்க கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சாரோட பிறந்தநாளுக்கு, 'இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கதான்' என்று சொன்னேன். ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கிறீங்கன்னு சொன்னேன். உடனே அவர் என்னை கல்கி தயாரிப்பாளர் அஸ்வினி தத்திடம் அழைத்துச் சென்றார். நான் அவரிடமும் இதையே சொன்னேன். அதற்கு அவர், 'கமல் சார் வெறும் 10 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்தார்' என தெரிவித்தார். அப்படியானால், ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் டாலர் கமல் சார் சம்பாதிக்கிறார். 

கல்கி 2898 ஏடி என்ற முழுப் பெயருடன் இந்தத் திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று வெளியானது. கல்கி உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 739 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. தற்போது கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். 

கல்கி 2 திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரபாஸ் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோன் அதன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிவிட்டார். 

அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கல்கி முதல் பாகத்தைப் போல் அதன் இரண்டாம் பாகத்திலும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title