Header Logo

சினிமா
ஜெயிலர் 2 படத்தில் கிங் கான்!

Mar 10, 2026 - 11:06 AM -

0

ஜெயிலர் 2 படத்தில் கிங் கான்!

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. முதல் பாகம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை நாம் அறிவோம். 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். 

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பல்வேறு திரையுலகில் இருந்து உச்ச நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இதில், பாலிவுட் திரையுலகில் இருந்து கிங் கான் நடிகர் ஷாருக்கான் ஜெயிலர் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், ஷாருக்கான் இப்படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது என இதற்கு முன் தகவல் வெளியான நிலையில், தற்போது எஸ்.ஜே. சூர்யா, ரஜினிகாந்த், ஷாருக்கான் இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். 

இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடக்கும் என்றும், அதன்பின் முழுமையாக ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் வருகிற ஜூன் மாதம் ஜெயிலர் 2 வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title