Header Logo

சினிமா
''யூத்" பட தலைப்பு குறித்து கென் கருணாஸ் விளக்கம்!

Mar 10, 2026 - 12:18 PM -

0

''யூத்" பட தலைப்பு குறித்து கென் கருணாஸ் விளக்கம்!

`அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பு மட்டுமின்றி சில திரைப்படங்களில் கென் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் கென் கருணாஸ் 'யூத்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 19 ஆம் திகதி வெளியாகிறது. `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பாடசாலை பின்னணியில் உருவாகியுள்ளது. 

யூத் திரைப்படத்தின் ரிலீசை ஒட்டி இயக்குநரும், நடிகருமான கென் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் பட தலைப்பை தேர்வு செய்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், "படத்தின் தலைப்புக்கு பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தனர். எனினும், எனது தந்தை கருணாஸ் மற்றும் நடிகர் விஜய் என இருவரின் அரசியல் முற்றிலும் முரணாக இருக்கிறதே என்று எனது தாய் கேட்டார். 

எனக்கு இந்தப் படத்தின் தலைப்பு கிடைத்தது சிறப்பான விஷயம். மேலும், இந்த தலைப்பை வாங்கியது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட அழுத்தம் தான். இந்த தலைப்புக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. படம் வெளியாகும் போது பட தலைப்பு குறித்து அப்படி யோசிக்க மாட்டார்கள்," என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title