Header Logo

சினிமா
கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா!

Mar 11, 2026 - 05:51 PM -

0

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா!

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. 

2000 களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், அதன்பின் சில ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். 

ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜுலியட், சிங்கம் 2 என தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 

நடிகை ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா - சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். 

ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title