Header Logo

சினிமா
மேடையில் விஜய்யை அட்டாக் செய்து பேசிய வடிவேலு!

Mar 13, 2026 - 04:47 PM -

0

மேடையில் விஜய்யை அட்டாக் செய்து பேசிய வடிவேலு!

நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தாக்கி பேசி இருக்கிறார். 

சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வடிவேலு, அரசியல் மேடையிலும் தன்னுடைய கருத்துகளைத் தாராளமாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, அவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்தது பேசியது கவனம் பெற்றுள்ளது. 

வடிவேலு பல ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். அந்தக் கட்சியுடன் அவருக்கு நீண்ட காலமாக ஒரு நெருக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்தபோது உதயநிதி ஸ்டாலினுடன் ஏற்பட்ட தொடர்பும் அவரின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியதாக பேசப்படுகிறது. இதற்கு முன்பும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்தை எதிர்த்து திமுக மேடையில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் சமீபத்திய திமுக நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார். “முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஒரு முக்கிய முடிவை எடுத்தார். மக்களின் வங்கி கணக்குகளுக்கு ரூபா 5000 வழங்கப்பட்டதை கேட்டதும், திமுக ஆட்சி அழிய வேண்டும் என கூறுபவர்கள் கூட அதிர்ச்சி அடைந்திருக்கலாம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் ஏன் சிலர் தேவையற்ற விமர்சனம் செய்கிறார்கள் என்று புரியவில்லை” என அவர் கூறினார். 

மேலும், திமுக அரசு இன்னும் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வரப்போகிறது என்றும் வடிவேலு தெரிவித்தார். “ஸ்டாலினை சாதாரண தலைவராக நினைக்கக்கூடாது. பேசுவது மேடையில் எவராலும் செய்யலாம். ஆனால் செயல்படுவது திமுக அரசுதான். இந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி ஆகிவிடும்” என்று அவர் கூறினார். 

அதேபோல், தமிழ்நாட்டில் திமுக தான் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசியல் சக்தி என்றும் அவர் தெரிவித்தார். “எந்த சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தலைவர் ஸ்டாலின் மட்டுமே. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு கிடைப்பதற்கு காரணம் இந்த அரசு தான். எதுக்கெடுத்தாலும் திமுகவை அழிக்கணும்னு சொல்றாங்க. டேய் சொன்னவனை ஃபுல்லா ஆளைக் காணோம். எங்க இருக்காங்கனு தெரியல. அதைப்பற்றி பேசுனா சிக்கலாகிடும். நான் டீப்பா போக விரும்பல” என அவர் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசி உள்ளார். 

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்ட அவர், “அடுத்த தேர்தலிலும் திமுக பெரிய வெற்றி பெறும். 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது எங்கள் இலக்கு. மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். ஆனால் அதற்காக நாம் சும்மா இருக்கக்கூடாது தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். திமுக என்றாலே உழைப்பு தான் அடையாளம்” என்று உரையாற்றினார்.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title