Header Logo

சினிமா
மீண்டும் வெடித்த என்சாய் எஞ்சாமி பாடல் விவகாரம்!

Mar 13, 2026 - 05:15 PM -

0

மீண்டும் வெடித்த என்சாய் எஞ்சாமி பாடல் விவகாரம்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டடித்தது. யூடியூப்பில் அதிக வியூஸ்களை அள்ளியது. இந்தப் பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என பாடகர் அறிவு ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பாடகர் அறிவு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்ஜாய் எஞ்சாமி பாடல் (5 ஆண்டுகள்) குறித்த விளக்கம். இந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய வாழ்க்கை அனுபவம், கலாசார வரலாறு அடிப்படையில் பாடலை எழுதி, பாடி, முதன்மை மெட்டும் அமைத்து நடித்தேன். 

இதற்கான இசை கூட்டு முயற்சியில் தான் உருவாக்கப்பட்டது. அதேபோல அங்கீகாரமும், ஊதியமும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பாடல் என்னுடைய நிலம் மற்றும் மக்கள், அவர்களின் கதைகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப்பட்டது. என்னுடைய வரலாறு பெரும்பாலான மக்களுக்கு சென்று சேரும் என்ற நம்பிக்கையில் தான் பகிர்ந்துகொண்டேன். ஆனால், இந்தப் பாடலை எழுதியும், முதன்மை மெலடிக்கு இசையமைத்த போதிலும் ‘featuring artist’ என்றே என்னை குறிப்பிட்டனர். 

அப்போது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பாடலுக்காக என்னுடன் பணியாற்றியவர்கள், அதற்கான உரிமையையும், ராயல்டியையும் பெறுகின்றனர். ஆனால், என்னுடைய உழைப்புக்கான ஊதியமோ, பாடல் மீதான உரிமையோ எனக்கு வழங்கப்படவில்லை. கருணையின் அடிப்படையில் கேட்பது அல்ல. மாறாக இது உரிமை, அங்கீகாரம், உழைப்பவர்களின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. 

சுயாதீன தனியிசை கலைஞர்களே, உங்கள் படைப்புகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களை போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை தெரிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “இது உங்கள் சொந்த கருத்தாக இருக்கலாம். நீங்கள் கோரும் தொழில்நுட்ப அங்கீகாரமும், சட்ட ரீதியான உரிமையும் எப்போதும் நேர்மையற்றதாகவும், கற்பனை நிறைந்ததாகவுமே உள்ளது. நீங்கள் கோரும் ஆதாரத்துடன் நேரடியாக நீங்கள் விரும்பும் ஊடகத்தில் என்னுடன் விவாதிக்க தயாரா? அனைத்து இடத்திலும் நீங்கள் என்னை ப்ளாக் செய்ததால் இங்கே பதிலளிக்கலாம். நான் தயாராக இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title