Header Logo

சினிமா
துபாயில் மகளுடன் சிக்கிய 'உலக அழகி' நடிகை!

Mar 14, 2026 - 11:38 AM -

0

துபாயில் மகளுடன் சிக்கிய 'உலக அழகி' நடிகை!

துபாயில் மகளுடன் சிக்கிய உலக அழகி நடிகை இந்தியாவுக்கு வந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோவை பதிவிட்டுள்ளார். 

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில், துபாயில் சிக்கிய நடிகை லாரா தத்தா சுமார் 12 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, வான்வழி போக்குவரத்து சீரானதை அடுத்து, இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்த இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் ஒரு ஸ்டுடியோவில் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், மேலே இருந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாகவும் நடிகை லாரா தத்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார். 

மேலும் துபாயில் சிக்கித் தவித்த பின்னர் சமீபத்தில் இந்தியா திரும்பிய நடிகை சோனல் சவுகான், லாரா தத்தாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவரது பாதுகாப்புக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகை லாரா தத்தா துபாயிலிருந்து தனது 14 வயது மகள் சாய்ராவும் இந்தியா திரும்பியுள்ளார். "துபாயில், விமான நிலையத்தில் இருந்து வெறும் 10 கி.மீ தூரத்தில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே தினந்தோறும் குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்து 2 மணிநேரம் காரில் பயணித்து, விமானம் பிடித்து திரும்பி வந்த அனுபவம் மிக கொடுமையானது. அந்த அதிர்ச்சியில் இருந்து என் மகள் வெளிவர ரொம்ப நாள் ஆகும்” என்று லாரா தத்தா கூறியுள்ளார். 

2000 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அதன் பிறகு திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் மீண்டும் பெல்பாட்டம் என்ற படத்தின் மூலம் அக்சய் குமாருடன் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில், அவர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title