Header Logo
SLIC
உலகம்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை

Mar 15, 2026 - 02:49 PM

 மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. 

ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நாட்டின் வங்கிச் செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. 

அதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது. 

எதிரித் தரப்பினர் மீண்டும் இத்தகைய தவறுகளை இழைக்க முற்பட்டால், வளைகுடா நாடுகளிலுள்ள அனைத்து அமெரிக்க வங்கி கிளைகளும் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளாக மாறும் எனவும் ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது. 

அண்மையில் ஈரானின் பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான செபா வங்கி கட்டிடம் மற்றும் மற்றொரு வங்கி கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல ஊழியர்கள் உயிரிழந்ததுடன், வங்கி நடவடிக்கைகள் பல மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278