Header Logo

சினிமா
பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் மிரட்டல்!

Mar 16, 2026 - 03:24 PM -

0

பிரபல பாடகருக்கு சர்வதேச கும்பல் மிரட்டல்!

இந்திய அளவில் புகழ் பெற்ற ராப் பாடகர் பாட்ஷா. இவரது சமீபத்திய பாடல் "ததீரி" வெளியாகி வரவேற்புக்கு இணையான சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சையில் இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில், 'ததீரி' பாடலில் பெண்கள் மற்றும் சிறார்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, பாடகர் - ராப்பர் பாட்ஷாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துதுள்ளது. 

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் உறுப்பினர்கள், பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், பாட்ஷாவை "அவரது நெற்றியில் சுடுவதாக" மிரட்டினர். "பாடகர் பாட்ஷா, நீங்கள் ஹரியானாவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சித்தீர்கள். 2024 இல் உங்கள் கிளப்பில் டிரெய்லரை உங்களுக்குக் காட்டினோம் அடுத்த முறை நாங்கள் உங்கள் நெற்றியில் நேரடியாகச் சுடுவோம்" என்று கூறப்பட்டுள்ளது. 

2024 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பிற்கு வெளியே, பாடகரும் ராப்பருமான பாட்ஷாவுக்குச் சொந்தமான செவில்லே பார் மற்றும் லவுஞ்சில் ஒரு வெடி விபத்து ஏற்பட்டது - இதற்கு லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி கோல்டி பிரார் பொறுப்பேற்றிருந்தார். 

பாத்ஷாவின் சமீபத்திய ஹரியான்வி பாடல் `ததீரி' (Tateeree) தொடர்பாகக் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார், இந்தப் பாடலில் ஆட்சேபனைக்குரிய வரிகளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாத்ஷா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இந்தப் பாடல் பாட்ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, இணையத்தில் வெகுவாகப் பரவியது. கடந்த வாரம், இந்தப் பாடலின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று கூறி, பாட்ஷா மன்னிப்பு கோரினார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title