Header Logo
SLIC
கிழக்கு
வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

Mar 20, 2026 - 10:28 AM

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது. இதன்போது அவர் மிகச் சாமர்த்தியமாகச் செயற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்தத் திடீர் ஊடுருவல் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது. 

வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை, பிரதான வீதி ஊடாகச் சென்று தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த யானையை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர். 

காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் மீண்டும் நகரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278