Header Logo

செய்திகள்
மின்சாரக் கட்டணமும் அதிகரிக்குமா? - அமைச்சர் நலிந்தவின் விளக்கம்

Mar 20, 2026 - 06:19 PM -

0

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்குமா? - அமைச்சர் நலிந்தவின் விளக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், உலகச் சந்தையில் நிலக்கரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

சாதாரண காலங்களில் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளுக்கான விலைகளை விட தற்போது உலகச் சந்தையில் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே எதிர்காலத் தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, 

"எமது பிரதான இலக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதாகும். அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் மின்சார நுகர்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாதங்களில் மின்சார நுகர்வு அதிகமாக இருக்கும். நிலக்கரியின் தரம் தொடர்பான சில அறிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அவை குறித்து நாம் ஆராய்வோம். எவ்வாறாயினும், எமது எதிர்பார்ப்பு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகும். உலகச் சந்தையில் நிலக்கரி முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளன. மறுபுறம், இவ்வாறானதொரு சூழலில் நாம் கோரும் டெண்டர்களில் சாதாரண காலங்களில் கிடைக்கும் விலைகள் கிடைப்பதில்லை. எனவே, எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டே தீர்மானிக்க வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title