Header Logo

செய்திகள்
92 ஆவது புனிதர்களின் சமர் சமநிலையில் முடிவு

Mar 21, 2026 - 06:37 PM -

0

92 ஆவது புனிதர்களின் சமர் சமநிலையில் முடிவு

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற 92 ஆவது "புனிதர்களின் சமர்" கிரிக்கெட் போட்டி வெற்றியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி, 8 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. அதற்குப் பதிலளித்த புனித பீட்டர்ஸ் கல்லூரி, 9 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

இதன்படி, புனித பீட்டர்ஸ் கல்லூரியின் முதல் இன்னிங்ஸை விட 95 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த புனித ஜோசப் கல்லூரி, 3 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களைக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து, 290 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய புனித பீட்டர்ஸ் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title