Header Logo

சினிமா
ஒரே பாடலில் ஒரு வார்த்தையை 238 முறை பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான்!

Mar 23, 2026 - 05:51 PM -

0

ஒரே பாடலில் ஒரு வார்த்தையை 238 முறை பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புதுப்புது முயற்சிகளை தன் பாடல்களில் பயன்படுவது வழக்கம், அந்த வகையில் ஒரே வார்த்தையை 238 முறை பயன்படுத்தி ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் வலிமையான கூட்டணிகளில் ஒன்றாக மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் காம்போவை சொல்லலாம். 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிசை உலகில் காலடி வைத்த ரகுமான், அன்று முதல் இன்று வரை மணிரத்னத்தின் நம்பகமான இசையமைப்பாளராக திகழ்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், ரோஜாவுக்கு முன்னர் இளையராஜாவோடு மட்டுமே இணைந்து பணியாற்றிய மணிரத்னம், அதற்கு பின்னர் ரகுமானையே தனது பிரதான தேர்வாக வைத்திருக்கிறார். 

தற்போது கூட இவர்கள் கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் முன்ன சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகவும் ரகுமானில் இருந்து சாய் அபயங்கர் பக்கம் மணிரத்னம் சென்றுவிட்டதாக பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால் என்றென்றும் என்னுடைய படத்துக்கு ரகுமான் தான் இசையமைப்பார் என்று அறிவிக்கும் விதமாக போஸ்டர் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிரத்னம். அவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சாய் பல்லவியும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஜோடியாக நடிக்கிறார்கள். விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 

ஏ.ஆர்.ரகுமான் - மணிரத்னம் கூட்டணியில் சில படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. அதில் ஒரு படம் தான் கடல். அப்படம் தோல்வியடைந்தாலும் அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் மாஸ்டர் பீஸ் ஆக உள்ளன. கடல் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கும், நடிகை ராதாவின் மகள் துளசியும் ஜோடியாக நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமானதும் இப்படத்தின் மூலம் தான். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது உள்ளன. 

நெஞ்சுக்குள்ள, மூங்கில் தோட்டம், அடியே உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இதில் மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடல் இருக்கிறது. அப்பாடல் தான் மகுடி. அப்பாடலில் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. அது என்னவென்றால், பிரபல பாடகர் ஏடிகே பாடி, வரிகளையும் எழுதிய மகுடி பாடலில் 'மகுடி' என்ற ஒரே வார்த்தை மட்டும் 238 முறை இடம்பெற்றிருக்கும். இசையில் ஒரு வார்த்தையை மட்டுமே ஆதாரமாக வைத்து இத்தகையதொரு கவர்ச்சியான பாடலை உருவாக்கியிருப்பது ரகுமானின் மாஸ்டர் கிளாஸ் என்றே சொல்லலாம். அது வெளியாகி பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், அந்த பாடலின் தனித்துவமான வசீகரம் இன்றும் அப்படியே இருக்கிறது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title