Header Logo
SLIC
உலகம்
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 34 பேர் பலி

Mar 24, 2026 - 07:28 AM

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 34 பேர் பலி
Mobitel Inner 1278
EDEX Inner

கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் 125 பேருடன் சென்ற கொலம்பிய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பெரு எல்லையோரத்திலுள்ள கொலம்பியாவின் தெற்கு அமேசான் பிராந்தியமான புவேர்ட்டோ லெகுய்சாமோ (Puerto Leguízamo) பகுதியிலிருந்து இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற லொக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130 (Lockheed Martin Hercules C-130) ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த விமானத்தில் 11 விமானப்படை உறுப்பினர்களும் 114 இராணுவ வீரர்களும் பயணித்ததாக கொலம்பிய விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். 

காயமடைந்த 48 பேர் மீட்கப்பட்டுள்ள போதிலும், உயிர் பிழைத்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உத்தியோகபூர்வ விபரங்களை அவர் வெளியிடவில்லை. 

இதேவேளை, குறைந்தது ஒரு மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 77 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், "43 பேரின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை" என்றும் கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

எனினும், இதுவரை 34 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக புட்டுமாயோ (Putumayo) மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278