Header Logo

இந்தியா
ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது - சீமான்

Mar 25, 2026 - 11:11 AM -

0

ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது - சீமான்

திருப்பத்தூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில், 

போக்குவரத்து துறைக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. மின் துறைக்கும் கடன் உள்ளது. கல்வித் தரம் உயர்த்தப்படவில்லை. 

வைத்திய வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. சாலைகள் சரிவர அமைக்கப்படவில்லை. உள்ளூர் உற்பத்திகளை ஆதரிக்காமல், வெளி ஊர்களில் இருந்து வாங்கி விற்பனை செய்கிறார்கள். 

இதற்கு மேலாக கட்டண உயர்வு, சொத்து வரி போன்றவற்றை உயர்த்தி பொதுமக்களுக்கு சுமை சேர்த்துள்ளனர். 

இப்படிப்பட்ட அரசை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். 

தமிழகத்தில் ஆளும் கட்சிகள் தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றன. இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். 

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் என்ற நடைமுறை இருக்காது. ஆனால், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

நாங்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர நிலையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக பணியாற்றுவார்கள். மக்களுக்கு உண்மையாக நல்லது செய்யக் கூடியவர்களையே முன்னிறுத்துகிறோம். 

நாட்டு மக்களுக்கு எது சரியான திட்டம் என்பதை அவர்கள் உணர்ந்தால், இந்த அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே இருக்கும். அவர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறுகிறார்கள். 

நாங்கள் தமிழர்கள் என்று கூறுகிறோம். அவர்கள் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். நாங்கள் ஒரே மொழி தமிழ் என்ற கொள்கையை முன் வைக்கிறோம். பணத்திற்கு வாக்கு வாங்கும் அரசியல் நிலவி வருகிறது. 

மாண்புமிக்க ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title