Header Logo

சினிமா
கார் விபத்தில் பிரபல நடிகை பலி

Mar 25, 2026 - 02:45 PM -

0

கார் விபத்தில் பிரபல நடிகை பலி

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த நடிகையும் மாடலுமான ஹர்ஷில் காலியா ஜெய்ப்பூரில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தார். 

கடந்த 23 ஆம் திகதி இரவு சுமார் 11.30 மணியளவில், ஹர்ஷில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் அவரது கார் சென்றுகொண்டிருந்தபோது ஒரு வளைவில் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதித் தடுப்பில் மோதியது. 

மோதிய வேகத்தில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காரைத் தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை மீட்டனர். 

பலத்த தலைக்காயங்களுடன் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

30 வயதான ஹர்ஷில் காலியா, 2021 இல் 'மிஸ் திவா ராஜஸ்தான்' போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் ஆவார். 

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'க்ரைம் நெக்ஸ்ட் டோர்' என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title