Header Logo

செய்திகள்
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Mar 25, 2026 - 02:51 PM -

0

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

எவ்வாறாயினும், அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

நேற்று (24) சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார்.

அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title