Header Logo
SLIC
உலகம்
Meta நிறுவனத்துக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்!

Mar 25, 2026 - 04:09 PM

Meta நிறுவனத்துக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்!
Mobitel Inner 1278
EDEX Inner

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வியுற்றதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் 375 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த 6 வாரங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

விசாரணையின்போது, மெட்டா நிறுவனம் தனது செயலிகளை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற முறையில் வடிவமைத்ததோடு, பாலியல் சுரண்டல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, லாபத்திற்காக குழந்தைகளின் பாதுகாப்பை நிறுவனம் அடமானம் வைத்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. 

மேலும் விசாரணையில், மெட்டாவின் முன்னாள் ஊழியர்கள் உட்பட 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. 

விசாரணை முடிவில், அரசுத் தரப்பில் 2.2 பில்லியன் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் 375 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தங்கள் தளங்களில் தவறான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்க கடுமையாக உழைத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278