Header Logo
SLIC
மலையகம்
கலஹா திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு

Mar 26, 2026 - 01:11 PM

கலஹா திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் மூலமாக, கண்டி - கலஹா, தெல்தோட்டை குறுப் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு திருவள்ளுவர் சிலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் நடேசன் சுந்தரேசனால், பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரனிடம் இச்சிலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, பாடசாலை பிரதான மண்டபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு சிலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவள்ளுவர் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றுவதற்காகப் பிரதம அதிதியாக இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. திலகவதி அம்மையார் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்களான எஸ். ரவிச்சந்திரன், எஸ். தயாபரன், பி. சுரேஸ்குமார் மற்றும் கண்டி வலய ஆசிரியர் ஆலோசகர் கலாநிதி பிரபாகரன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278