Header Logo
SLIC
உலகம்
நேபாள நாட்டின் பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு!

Mar 27, 2026 - 02:29 PM

நேபாள நாட்டின் பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

நேபாள நாட்டின் 47வது பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா இன்று (27) பதவியேற்றார். 

கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார். 

இந்த சூழலில் புதிய அரசை தேர்தெடுத்தப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் திகதி நடைபெற்றது. இதில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 

ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார். 

இந்நிலையில் தற்போது அவர் நேபாளத்தின் இளம் பிரதமராக பதவியேற்றுள்ளார். 

முன்னாள் மேயரும் ரெப் பாடகருமான பாலேந்திர ஷா இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். 

1990ல் காத்மாண்டுவில் பிறந்த இவர், கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் Structural Engineering முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278