Header Logo

பல்சுவை
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா?

Mar 28, 2026 - 02:03 PM -

0

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா?

இதயத்தையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க மிக அவசியமானது, நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது. காரணம், நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால், அது ரத்த நாளங்களின் சுவர்களில் மெல்ல மெல்லப் படிந்து ரத்தக் குழாய்களைக் குறுகலாக்கி, ரத்த ஓட்டத்தைத் தடுத்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக் காரணமாகும். 

தொடர்ந்து கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் புற்றுநோய் செல்களில் வேகமாக பரவும் அபாயத்தை அதிகரிக்கக் கூட செய்யலாம் என சொல்லப்படுகிறது. சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வின்படி, நம் உடலில் உள்ள பெரும்பாலான செல்கள், அவற்றின் மேற்பரப்பில் உள்ள இன்டெக்ரின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் உதவியுடன் அருகிலுள்ள செல்களுடன் ஒட்டிக்கொள்கின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் (குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் அல்லது LDL), இந்த இன்டெக்ரின்களைக் கொண்டிருக்கும் சிறிய ரத்த நாளங்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது, புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் நகர்ந்து பரவும் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நம்மால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த உணவுகள் என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

1) முட்டையின் மஞ்சள் கரு: இதில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அதிக அளவு உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, இது பாதிப்பின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்யும். 

2) வறுத்த உணவுகள்: எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி வறுக்கப்படும் உணவுகளில் டிரான்ஸ் ஃபேட் அதிகம். இது இதயத்திற்கு மிகவும் பாதிப்பானது. வறுத்த சிக்கன் தொடங்கி எண்ணெயில் போட்டு எடுக்கப்படும் அனைத்து உணவுகளுக்கும் இவை பொருந்தும். 

3) ஐஸ்கிரீம்: இதில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள பால் இருப்பதால், இது ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கும். தனியே அதிக கொழுப்புள்ள பால் குடிப்பதையும் தவிர்த்துவிடுவது அவசியம். 

4) பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: நாம் கடைகளில் வாங்கும் சிக்கன் பர்கர், ஃபிஷ் ஃபிங்கர் போன்ற உணவுகள் யாவும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளின் மூலம் சமைக்கப்படுபவை. இவை ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம் என்பதால் முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். 

அதன்படி, உலகில் அதிகம் திருடப்பட்ட பொருள் சீஸ் (Cheese) ஆகும். ஆம்... இதைக் கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதையெல்லாம் யாராவது திருடுவார்களா என்று. பல சர்வதேச அறிக்கைகளின்படி, சீஸ் உலகில் அதிகம் திருடப்பட்ட பொருளாக உள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் சீஸ் பல்பொருள் அங்காடிகளில் இருந்து திருடப்படுகிறது. இதற்கு காரணம், அதிக தேவை மற்றும் விலை என்று கூறப்படுகிறது. 

5) சீஸ்: இதில் சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் உப்பு அதிகம். அதிக அளவு சீஸ் சாப்பிடும்போது உடல் எடையும் கொலஸ்ட்ராலும் உயரும் அபாயம் அதிகம். 

6) துரித உணவுகள் மற்றும் பேக்கரி உணவுகள்: பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட் போன்றவற்றில் மைதா, சர்க்கரை மற்றும் தரமற்ற டால்டா அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மோசமானது. 

எனவே இவற்றை தவிர்த்துவிட்டு ஓட்ஸ், நட்ஸ் (பாதாம், வால்நட்), நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title