Header Logo

சினிமா
லால்குடி தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி

Mar 28, 2026 - 03:32 PM -

0

லால்குடி தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி

தமிழ் திரை உலகில் வில்லன் நடிகராக மக்களை கவர்ந்து வருபவர் மன்சூர் அலிகான். அவரது யதார்த்தமான பேச்சும், இயல்பான நடிப்பும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அவருக்கென தனி இடம் இருந்து வருகிறது. 

மன்சூர் அலிகான் நடிகராக மட்டுமின்றி இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவரது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லால்குடியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் லீமா மார்ட்டின் போட்டியிடுகிறார். 

நான் 2011 லேயே திருச்சியில் தனியாக போட்டியிட்டேன். நான் வளர்ந்த ஊர் பள்ளப்பட்டி. திருச்சி மாவட்டத்தில் இருந்தது. நாங்கள் இந்திய ஜனநாயகப்புலிகள் சார்பாக தி.மு.கவில் சீட் கேட்டோம். 6 மாதமாக அலைந்தோம் பிறகு எடப்பாடியாரை சந்தித்து சில முறை பேசினேன். யாரும் கண்டுக் கொள்ளாததால் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். 

லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இங்கு 10 முறை 5 முறை வென்றவர்களால் வாழை சாகுபடி விவசாயிகளின் தேவைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தமிழ்நாடெங்கும் போதைப்பொருள் சிறுவர்களுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்கிறது. பொலிஸ் துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் எங்களுக்கு நிச்சயமாய் வாக்களிப்பர். வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்க உள்ளோம் என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title