Header Logo

சினிமா
நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்!

Mar 30, 2026 - 02:04 PM -

0

நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் இரண்டு படங்கள் வந்தது. ஹிந்தியில் சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் பெரிய தோல்வி ஆனது. 

சல்மான் கான் நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார், மொழி பிரச்சனை எனக்கு இருந்தது. அதனால் தான் படம் தோல்வி அடைந்தது என முருகதாஸ் கூறி இருந்தார். 

அதே நேரத்தில் முருகதாஸ் இயக்கிய மதராஸி படமும் தோல்வி அடைந்தது. 'சிவகார்த்திகேயன் சீக்கிரமே ஷூட்டிங் வந்திருப்பாரே.. அந்த படம் ஏன் தோல்வி அடைந்தது' என சல்மான் கான் முருகதாஸை தாக்கி பேசி இருந்தார். 

இந்நிலையில் மதராஸி படத்தின் தயாரிப்பாளர் தற்போது இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். 

"முதலில் 115 கோடி ரூபாயில் படத்தை எடுத்து முடிக்க முருகதாஸ் பட்ஜெட்டை கூறினார். ஆனால் படத்தை முடிக்கும்போது 170 கோடி ரூபாய் ஆக அது உயர்ந்தது. அவர் சரியாக திட்டமிடாததும், அதே நேரத்தில் சிக்கந்தர் படத்தை இயக்கி கொண்டு இருந்ததும் அதற்கு காரணம். அதனால் அவர் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்" என கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். 

இந்த பிரச்சனை பற்றி நடந்த பேச்சுவார்த்தையில் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ரமணா 2 படத்தின் கதையை எழுதி தயாரிப்பாளருக்கு இலவசமாக தர வேண்டும் என ஒப்பந்தம் எட்டப்பட்டு இருக்கிறதாம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title