Header Logo
SLIC
உலகம்
பாதிக்கப்பட்ட பெண்ணின் கருணைக்கொலைக்கு அனுமதி

Mar 30, 2026 - 03:46 PM

பாதிக்கப்பட்ட பெண்ணின் கருணைக்கொலைக்கு அனுமதி
Mobitel Inner 1278
EDEX Inner

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) கடந்த 26 ஆம் திகதி கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022 இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது. 

அதனையடுத்து, நோலியா காஸ்டிலோவின் கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமையை அந்த இளம்பெண்ணுக்கு வழங்கி அனுமதித்தது. 

நோலியாவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்பேரில், கடந்த 26 ஆம் திகதி மாலை கருணைக்கொலை மூலம் அவர் உயிரிழந்துள்ளார். நான் அமைதியாக விரும்புகிறேன். எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” என தனது தந்தையிடம் கூறிய நோலியாவின் வார்த்தைகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

அதனையடுத்து, 18 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நோலியாவும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நோலியாவுக்கு கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்தது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278