Header Logo

சினிமா
சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை!

Mar 30, 2026 - 05:12 PM -

0

சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை!

நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் சூரி. இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மண்டாடி. படகு போட்டியை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. 

இப்படத்தை தொடர்ந்து சூரி நடிப்பில் உருவாகவிருக்கும் அவருடைய 7 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. 

இப்படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

ரவிக்குமார் - சூரி கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை நாம் அறிவோம். அதை மையப்படுத்திதான் இப்படத்தை எடுக்கவுள்ளார்களாம். அதை பரிதிபலிக்கும் வகையில்தான் இந்த அறிவிப்பு போஸ்டரும் அமைந்திருந்தது. 

இந்த நிலையில், இப்படத்தில் சூரியுடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எதுவும் உறுதியான தகவல் இல்லை. மமிதா பைஜூ நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன், கர, விஸ்வநாத் & சன்ஸ், இரண்டு வானம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title