Mar 31, 2026 - 09:39 AM




கம்பளை, திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் இன்று (31) சிறப்பாக ஆரம்பமாகியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை கம்பளை, மகாவலி கங்கையிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்படும் தீர்த்தக்குட பவனி நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தீர்த்தக்குடங்களை ஏந்திச் சென்றனர்.
இந்தத் தீர்த்த பவனியானது மகாவலி ஆற்றிலிருந்து புறப்பட்டு, அம்பகமுவ வீதி வழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது. பக்திப் பரவசத்துடன் அதிகளவிலான பக்தர்கள் இந்தத் தீர்த்தக் குட பவனியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.























