Header Logo

செய்திகள்
ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்

Mar 31, 2026 - 05:57 PM -

0

ஈரானுக்கு எதிரான போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் விமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும், அதேவேளை ஈரான் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு ஒரு கேலியான ஆலோசனையை முன்வைத்து, அவர் சமூக ஊடகங்களில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்: 

"உங்களிடம் கூற என்னிடம் இரண்டு யோசனைகள் உள்ளன. முதலாவது, அமெரிக்காவிடம் இருந்து எரிபொருளை விலைக்கு வாங்குங்கள், எங்களிடம் தாராளமாக உள்ளது. இரண்டாவது, இப்போதாவது தாமதமாகவோ அல்லது தைரியத்தை வரவழைத்துக்கொண்டோ ஹோர்முஸ் நீரிணைக்குச் சென்று உங்களுக்குத் தேவையானதை பலவந்தமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்." 

இதன்போது பிரான்ஸ் குறித்து பிரத்யேகமாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், "பொருட்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானங்களுக்கு பிரான்ஸ் தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்காதது மிகவும் மோசமானது" என்றும் குற்றம் சாட்டினார். 

ஹோர்முஸ் நீரிணையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பமின்மை தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் தலைவர்களும் ஜனாதிபதி ட்ரம்பின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title