Header Logo

சினிமா
பாகுபலி 2 சாதனையை தூள் தூளாக்கிய 'துரந்தர் 2'!

Mar 31, 2026 - 06:44 PM -

0

பாகுபலி 2 சாதனையை தூள் தூளாக்கிய 'துரந்தர் 2'!

இந்திய சினிமாவையே இப்போது 'துரந்தர்' ஃபீவர் தான் ஆட்டிப்படைக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் களத்தில் ரன்வீர் சிங் ஒரு 'தோற்கடிக்க முடியாத வீரனைப்' போல முன்னேறி வருகிறார். ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்: தி ரிவென்ஜ்' வெறும் ஒரு படமாக இல்லாமல், சாதனைகளை உருவாக்கும் சுனாமியாக மாறியுள்ளது. ரிலீஸான வெறும் 12 நாட்களில் உலக அளவில் சுமார் 1400 கோடி ரூபா வசூல் செய்து, சினிமா ரசிகர்களை மிரள வைத்துள்ளது. 

ஒரு காலத்தில் 'பாகுபலி 2' படைத்த சாதனைகள் யாராலும் அழிக்க முடியாத மைல்கல் என்று சொல்லப்பட்டது. ஆனால், 'துரந்தர் 2' இப்போது அந்த வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. புஷ்பா 2, பாகுபலி 2, தங்கல் போன்ற மெகா ஹிட் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் 22 மில்லியன் டாலர் சுமார் 207 கோடி ரூபா வசூல் செய்து, 9 ஆண்டுகளாக பிரபாஸ் பெயரில் இருந்த சாதனையை ரன்வீர் சிங் சத்தமே இல்லாமல் முறியடித்துள்ளார். 

இந்த பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்து, 'பாகுபலி' படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டாவே மனதார பாராட்டியுள்ளார். "9 வருட சாதனையை முறியடித்து, இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற ஆதித்யா தர் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று ட்வீட் செய்து தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார். 

படத்தின் தொடக்கமே ஒரு திருவிழா போல இருந்தது. முதல் நாளிலேயே உலகளவில் 240 கோடி ரூபா வசூலை அள்ளிய இந்தப் படம், ஒரே வாரத்தில் 1,000 கோடி ரூபா கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தியது. இந்தியாவில் மட்டும் தற்போது 872 கோடி ரூபா வசூலித்துள்ள நிலையில், விரைவில் 1,000 கோடி ரூபா நெட் கலெக்‌ஷனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வளைகுடா நாடுகளில் ரிலீஸ் ஆகாமலேயே இந்த அளவுக்கு வசூல் செய்தது சாதாரண சாதனை இல்லை. 

இந்த ஸ்பை த்ரில்லர் படத்தில் ரன்வீர் சிங்கின் அதிரடியோடு, ஆர். மாதவனின் கனமான நடிப்பு, அர்ஜுன் ராம்பால் மற்றும் சஞ்சய் தத்தின் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்கள் படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளன. சாரா அர்ஜுன் மற்றும் ராகேஷ் பேடியின் சிறிய கதாபாத்திரங்கள் கூட கதைக்கு வலு சேர்த்துள்ளன. இதன் முதல் பாகம் 1,300 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகம் அதன் எல்லா எல்லைகளையும் தாண்டி வளர்ந்து நிற்கிறது. 

மொத்தத்தில், 'துரந்தர் 2' வெறும் பணம் சம்பாதிக்கும் படமாக மட்டும் இல்லாமல், தென்னிந்திய படங்களுக்கு இணையாக பாலிவுட்டாலும் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்துள்ளது. ரன்வீர் சிங்கின் கெரியரில் இது ஒரு 'அல்டிமேட்' வெற்றி என்பதில் சந்தேகமே இல்லை!

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title