Header Logo

இந்தியா
த.வெ.க. பொதுக்கூட்டத்தில் வீசப்பட்ட மதுபான போத்தல்!

Apr 1, 2026 - 10:34 AM -

0

த.வெ.க. பொதுக்கூட்டத்தில் வீசப்பட்ட மதுபான போத்தல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக களமிறங்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. கட்சி தனித்து போட்டியிடுகிறது. 

இந்தத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதேபோல் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களின் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து த.வெ.க. சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா அயனாவரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார். 

பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த தங்கும் விடுதியில் இருந்து மதுபான போத்தல் ஒன்று கூட்டத்திற்கு நடுவே வீசப்பட்டது. இதனால் பெண் ஒருவருக்கு காயமடைந்தது. காயமுற்ற பெண் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதனிடையே மதுபான போத்தல் வீசப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி தங்கும் விடுதியில் இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அயவனாவரத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பில் மதுபோதையில் இருந்த இருவர் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபான போத்தல்களை வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபான போத்தல் விழுந்தது. 

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளது. 

பொதுக்கூட்டத்தில் மதுபான போத்தல் வீசப்பட்ட சம்பவம் குறித்து பேட்டியளித்த ஆதவ் அர்ஜூனா, "முதலில் நான் வைத்தியசாலைக்கு விரைகிறேன், அங்கு சென்று என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title