Apr 1, 2026 - 04:30 PM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று புனித மிக்கேல் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் யூட்நிமால் அனுஸ்ராம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான இவர், நாவற்குடா கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த யூட்நிமால் தம்பதியினரின் புதல்வர் ஆவார். உயர்தரப் பரீட்சையில் 3 'A' சித்திகளைப் பெற்று, விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவர் இந்தச் சாதனை படைத்துள்ளார்.

































