Header Logo

சினிமா
நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல இயக்குநர் கைது!

Apr 1, 2026 - 05:45 PM -

0

நடிகை அளித்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல இயக்குநர் கைது!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

படப்பிடிப்பு தளம் ஒன்றில் தன்னை பாலியல் ரீதியாக தாக்க முயன்றதாக குற்றம்சாட்டி பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இடுக்கி மாவட்டத்தில் இருந்து ரஞ்சித் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் தன்னை ஒரு கேரவனுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக அந்த நடிகை குற்றம் சாட்டியுள்ளார். 

ரஞ்சித்துக்கு எதிரான வழக்கு திங்களன்று கொச்சி நகர பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது தொடுபுழாவில் பொலிஸ் காவலில் உள்ளார். விரைவில் அவர் கொச்சி பொலிஸா​ரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது. 

நடிகை மகளின் வாக்குமூலம் திங்கள்கிழமை மகளிர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் ரஞ்சித்தை கைது செய்தது. மலையாள திரையுலகில் நிகழும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த நீதிபதி கே. ஹேமா குழுவின் அறிக்கையில் வெளிவந்த தகவல்களை தொடர்ந்து, ரஞ்சித் முன்னதாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார். 

2024 ஆம் ஆண்டில், கொச்சி நகர காவல் ஆணையரிடம் ஒரு பெங்காலி நடிகை புகார் அளித்ததை அடுத்து, ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title