Header Logo

செய்திகள்
நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு அரசுடையது

Apr 1, 2026 - 05:57 PM -

0

நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் பொறுப்பு அரசுடையது

நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசிடமே காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறித்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளார். 

நாளுக்கு நாள் நாட்டு மக்களின் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகின்றது. 

எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன. இதனால் 2 கோடியே 20 இலட்சம் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி வருகின்றனர். 

சமூகத்தில் ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கென விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். 

யூனிசெப் அமைப்புடன் உடனடியாக கலந்தாலோசித்து விசேட நலன்புரித்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனங்களின் அடிமைகளாகாமல் உடனடியாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசாங்கம் எவ்வளவுதான் கூறினாலும் கடுமையான உர பற்றாக்குறை ஏற்படுவதால், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கலந்தாலோசித்து, நெல், சோளம், தேயிலை உள்ளிட்ட அனைத்து பயிர்ச் செய்கைகளுக்கும் தேவையான உள்ளீடுகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். 

தற்போது விதைகளுக்கு தட்டுப்பாடு எழுந்து காணப்படுகின்றன. யூரியாவிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. 

விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைத்தபாடில்லை. சில நாட்களில் சிறு போக பருவம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதற்குத் தேவையான எரிபொருள் உரியவாறு விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. 

பயிர்களுக்கு உத்தரவாத விலை இல்லாமையினால், விவசாயிகள் மிகக் குறைந்த விலையில் தமது அறுவடைகளை விற்க வேண்டி காணப்படுகின்றன. 

முழு விவாசயத் துறையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளதால், இப்போதாவது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலந்தாலோசித்து விவசாய நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்பத் தேவையான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். 

மீனவர்கள், தொழில்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் சகல தரப்பினரும் வீர்ச்சியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் அலட்சியமாக இராமல், வீழ்ச்சியையும் சரிவுகளையும் சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்க பலத்தை சேர்க்கும் மக்களுக்காக வேண்டி முழுமையான நலன்புரி தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 

சில நாட்களில் புத்தாண்டுக்கு தொழிற்சாலைகள் மூடுவதால் புத்தாண்டுக்கு பின் இந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசின் கடமையாகும். 

பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடைநிறுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி சமூகம், முதியோர் சமூகம், ஆபத்தான நிலையிலுள்ள தரப்பினர் ஆகிய அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

நாட்டின் பொருளாதார வலிமையை தக்கவைத்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title