Apr 1, 2026 - 07:05 PM -
0
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் நாளை (02) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
