Header Logo

இந்தியா
இணையத்தில் வைரலாகும் விஜயின் பிரசார பாடல்

Apr 1, 2026 - 10:10 PM -

0

 இணையத்தில் வைரலாகும் விஜயின் பிரசார பாடல்

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. 

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டன. 

தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 30-ஆம் திகதி தொடங்கியது. 

இந்த தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

பெரம்பூர் தொகுதியில் அவர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தேர்தல் பிரசார பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். 

உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா?' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பாடலில் 'மெரள போகுது ஸ்டேட்டு, எங்க விசிலு சத்தம் கேட்டு; நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு' உள்ளிட்ட வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title